Son Killed Mother Adulterer: தாயின் கள்ளக்காதலன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை; 17 வயது மகன் ஆத்திரம்..!

மதுரையில் தனது தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த நபரை, அவரது மகன் பீர் பாட்டிலால் குத்தி, கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder Blood (Photo Credit: Pixabay)

மே 21, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அவர் அங்கு தொடர்ந்து வேலை செய்து வந்த நிலையில், ராஜ்குமார் (வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. Instagram Love Marriage: இன்ஸ்டாகிராம் காதல்; வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட மாணவி..!

இந்நிலையில், இவர்கள் இருவரின் பழக்கம் அந்த பெண்ணின் 17 வயது மகனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது தாயையும் ராஜ்குமாரையும் கண்டித்து வந்துள்ளார். இதனையடுத்து, திருமங்கலம் அருகே உள்ள அவரது கணவர் வீட்டிற்கு, இவர்கள் இருவரும் வந்துள்ளனர். இதனை பார்த்த அவரது மகனுக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியது. பின்னர், அந்த சிறுவன் ராஜ்குமாரை கூட்டிக் கொண்டு மது அருந்த சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் இருந்த ராஜ்குமாரை அங்கிருந்த பீர் பாட்டிலை (Beer Bottle) கொண்டு கழுத்தில் குத்தியுள்ளார். மேலும், அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தூக்கி போட்டார். இதில் ராஜ்குமாரின் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த சிந்துப்பட்டி காவல்துறையினர், கொலை செய்த சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.