Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!
கோயம்புத்தூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 18, கோயம்புத்தூர் (Coimbatore News): திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் விஷால் (வயது 21). இவர், கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரது நண்பர்களான திருப்பூரைச் சேர்ந்த பூபேஷ் (வயது 19), நரேன் (வயது 19), பிரண்வ் (வயது 20) மற்றும் இப்ராகிம் (வயது 20) ஆகிய 5 பேரும் காரில் கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுள்ளனர். 'Wagh Nakh' Weapon Reached India: 'வாக் நாக்' ஆயுதம் இந்தியா வருகை; பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி..!
அப்போது, அவர்கள் கணியூர் அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மையத் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விஷால், பூபேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக (College Students Death) உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்த நரேன், பிரண்வ் மற்றும் இப்ராகிம் ஆகிய 3 பேரையும் மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
மேலும், இதுதொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.