IPL Auction 2025 Live

Tractor Accident: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நடந்த பரிதாப நிகழ்வு.. டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி..!

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ganesha Statue | Dead Body File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 09, தேனி (Theni News): தேனி மாவட்டம், தேவாரம் அருகே மறவபட்டி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விஷால், நிவாஸ், கிஷோர் ஆகியோர் அவர்களது வீடு அருகே விநாயகர் சிலை (Ganesha Statue) வைத்து விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi) விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், விநாயகர் சிலையை டிராக்டரில் (Tractor) அலங்காரம் செய்து கரைப்பதற்காக சிந்தலசேரி சென்றுள்ளனர். 1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!

இதனையடுத்து, அங்குள்ள குளத்தில் சிலையை கரைத்து விட்டு, அங்கிருந்து திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த 3 அடி பள்ளத்தில் டிராக்டர் (Accident) கவிழ்ந்தது. இதில், டிராக்டரில் பயணம் செய்த 3 சிறார்களான மறவபட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் விஷால் (வயது 14), தமிழன் மகன் நிவாஸ் (வயது 14), பிரபு மகன் கிஷோர் (வயது 14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவாரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மூன்று சிறார்களின் உடல்களைக் மீட்டு, பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.