Three Women Fell Into Ditch: சாலையோர பள்ளத்தில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண்.. வீடியோ வைரல்..!
மதுரையில் சாலை பள்ளத்தில் குழந்தைகளுடன் 3 பெண்கள் அடுத்தடுத்து விழும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 21, மதுரை (Madurai News): மதுரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை (Heavy Rain) பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன. மதுரை மாநகராட்சியில் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதாலும், சாலை ஓரங்களில் பள்ளங்கள் (Ditch) இருப்பதாலும், அங்கு மழைநீர் தேங்கியுள்ளது. இந்தப்பகுதியில் செல்லும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. Wife Kills Husband: குடிபோதையில் தகராறு செய்த கணவர் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!
அந்தவகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையோர பள்ளத்தில் பெண்கள் குழந்தைகளுடன் தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய கடைக்கு முன்பாக சாலையோர மழை தண்ணீர் தேங்கி இருக்கிறது. அவ்வழியாக 3 பெண்கள் குழந்தைகளுடன் சாலையை கடந்து வந்துள்ளனர். அதில் பெண் ஒருவர் குழந்தையுடன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்ற முயன்ற இரு பெண்களும் அடுத்தடுத்து குழந்தைகளுடன் தவறி பள்ளத்தில் விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்து கடைக்காரர்கள் ஓடி வந்து பெண்களையும், குழந்தைகளையும் தூக்கி மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. பின்னர், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மழைக்காலங்களில் குறிப்பாக தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.