4 Fishermen Missing: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்; நடுக்கடலில் 4 மீனவர்கள் மாயம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகு மீது மோதி, அதனை கவிழ்த்த இலங்கை கடற்படையின் அட்டகாசம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fishermen (Photo Credit: @VOT24x7 X)

ஆகஸ்ட் 01, இராமநாதபுரம் (Rameswaram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், நேற்று 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தமாக பலநூறு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், கார்த்திகேயனின் படகில் இராமச்சந்திரன் உட்பட 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் சர்வதேச கடல் எல்லைக்கு அருகில், நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான கண்காணிப்பு படகு, மீனவர்களின் விசைப்படகின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக (Tamilnadu Fishermen) மீனவர்களின் படகு சேதமடைந்துள்ளது. TN Weather Update: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

4 மீனவர்களின் நிலை என்ன? கண்ணீரில் குடும்பத்தினர்:

இதனால் விசைப்படகு நீரில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 4 மீனவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்த தகவலை அறிந்த விசைப்படகின் உரிமையாளர் காத்திகேயன், மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் இலங்கை கடற்படைக்கு தொடர்புகொண்டபோது, சரிவர பதில் அளிக்கப்படவில்லை. தற்போது மீனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக மீனவர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு, வலைகளை கிழிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்த இலங்கை கடற்படை, சில மாதங்களாக தனது செயல்களை குறைத்து இருந்தது. இதனிடையே மீண்டும் தனது அராஜகப்போக்கை கையில் எடுத்துள்ளது.