Students Admitted To Hospital: விளையாட்டுத்தனமாக கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள்.. 5 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!
அரியலூரில் விளையாட்டாக கள்ளிப்பால் சாப்பிட்ட 5 சிறுவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 10, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம், குனமங்கலத்தில் கள்ளிப்பால் (Kallipaal) சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு (Illness) ஏற்பட்டுள்ளது. இதில், 3-ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட 5 பேர் கள்ளிப்பாலை விளையாட்டாக சாப்பிட்டு வந்து, ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். TN Weather Update: வெளுக்க போகுது மழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்களுக்கு (School Students) முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக 5 மாணவர்களும் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.