Jewellery Theft: வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 10 சவரன் தாலி சங்கிலி பறிப்பு.. கொள்ளையர்கள் அட்டூழியம்..!

தாம்பரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theft (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 05, தாம்பரம் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே வெங்கம்பாக்கம் ஜெயராம் நகர் சாலையில் வசித்து வருபவர் சிவசங்கர் (வயது 32). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேவி துர்கா. இவர்கள் இருவரும் நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு வீட்டில் உறங்கச் சென்றுள்ளனர். TN Weather Update: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 05) அதிகாலை 3.45 மணியளவில் கொள்ளையர்கள் சிவசங்கர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஹாலில் இருந்த 100 கிராம் வெள்ளிப் பொருட்களையும், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தையும் திருடினர். பின்னர், படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த துர்காதேவியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி சங்கிலியையும் (Thali Chain) அறுத்துக் கொண்டு தப்பியுள்ளனர். இதனையடுத்து பதறியடித்து எழுந்த துர்கா தேவி சத்தமிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிவசங்கரன் எழுந்து வந்துள்ளார். ஆனால், அதற்குள் கொள்ளையர்கள் (Thief) அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, பீர்க்கங்காரணை காவல்நிலையத்தில் சிவசங்கரன் புகார் அளித்தார். புகாரின்பேரில், அவரது வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif