Boy Tortured Tuition Teacher: ஆசைக்கு உடன்படாத இளம்பெண்ணுக்கு வினோத தொல்லை: ஆன்லைன் ஆர்டர் கொடுத்து 2 கே கிட் அட்ராசிட்டி.. ஆப்படித்த சைபர் கிரைம்.!

ஆசைக்கு உடன்படாத இளம்பெண்ணுக்கு கேஷ் ஆன் டெலிவரியில் பல பொருட்களை அனுப்பி சிறுவன் டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

Love | Girl Sad (Photo Credit: Pixabay)

ஜூலை 24, சென்னை (Chennai): சென்னை பெரிய மேட்டை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் (Tuition) எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த டியூஷனுக்கு அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் படித்து வந்துள்ளான். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் இருவரின் வீட்டாருக்கும் தெரியவர, இருவரையும் கண்டித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் அந்த சிறுவனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

நூதன முறையில் பழிவாங்க பிளான்: அதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மாணவியை நூதன முறையில் பழிவாங்க பிளான் போட்டிருக்கிறார். அந்த சிறுவன், கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு இரண்டு நாட்களில் அமேசான், ஃபிலிப்கார்ட், ஸ்விகி (Amazon, Flipkart, Swiggy) உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்து கேஷ் ஆன் டெலிவரி போட்டுள்ளார். இதனால் பல டெலிவரி ஊழியர்கள் மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை கொடுத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் டெலிவரி ஊழியர்களிடம் தாங்கள் ஆர்டர் செய்யவில்லை என கல்லூரி மாணவியும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு பொருட்களுக்கு பணம் தராத ஆத்திரத்தில் டெலிவரி ஊழியர்களும் சண்டையிட்டுள்ளனர். அதை சிறுவன் வேடிக்கை பார்த்து வந்திருக்கிறார். TN Weather Update: தமிழ்நாட்டிற்கு மிதமான மழை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சிறுவன் கைது: தொடர்ந்து 77 முறை ஓலா மற்றும் ஊபரில் வாகனகளை புக் செய்து பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி உள்ளார். இதனால் கடும் தொந்தரவை அனுபவித்த அந்த பெண்ணின் வீட்டார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி பெண்ணை தொந்தரவு செய்த 17 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 2 செல்போன்கள் வைஃபை ரூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றினர். தொடர்ந்து சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் படுத்தியுள்ளனர். இதையடுத்து சிறுவனுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.