Couple (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 13, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கோரேகான் பகுதியில் 18 வயதுடைய இளம்பெண் தனது தாய் ஊர்மிளாவுடன் வசித்து வருகிறார். இளம்பெண் இளைஞர் ஒருவருடன் நட்பு உறவில் இருப்பதாக தெரியவருகிறது. அந்த இளைஞர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டுற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, 18 வயதுடைய இளம்பெண்ணின் தாயாருக்கும் - இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதாக தெரியவருகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..! 

காவல் நிலையத்தில் புகார்:

இதனிடையே, மகளின் நண்பரை கரம்பிடித்து வாழலாம் என திட்டமிட்ட பெண், வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொடுத்து விற்பனை செய்து பணம் ஏற்பாடு செய்து வைக்க கூறியுள்ளார். இவர்களின் திட்டப்படி பெண்ணின் கள்ளக்காதலரும் பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். அந்த பணத்தில் இருவரும் ஒருசில நேரத்தில் தனிமையான இடத்துக்குச் சென்று உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதாக பெண்ணின் கணவர் சந்தேகித்துள்ளார். இதுதொடர்பாக திண்டோஷி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் உறவு அம்பலம்:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், வீட்டில் இருந்து நகையை யாரேனும் திருடி சென்றார்களா? என விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பெண்ணின் தாய்க்கும் - மகளின் நண்பருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் பழக்கம் தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவும், சில காலம் வெளியே சென்று ஊர் சுற்றவும் நகையை திருடி விற்பனை செய்துகொண்டதும் அம்பலமானது. இதனையடுத்து, திருட்டு வழக்கில் பெண்ணை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த திருட்டு நகையை வாங்கி விற்பனை செய்ததாக அவரின் கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டார். நகைகள் மீட்கப்பட்டன. ஊர்மிளாவின் கணவர் மும்பை மாநகராட்சியில் நல்ல வேளையில் இருக்கும் நிலையில், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.