Mysterious Gang Brutally Kills Teenager: நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழி; முகம் சிதைத்து அடுத்தடுத்து 4 பேர் கொடூர கொலை.. திருப்பூரில் ரணகளம்..!
திருப்பூரில் நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழியாக 5 பேர் கொண்ட கும்பல், வாலிபரை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 09, பல்லடம் (Tirupur News): திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நேற்று (ஆகஸ்ட் 08) காலை 5 பேர் கொண்ட கும்பல், வினோத் கண்ணன் என்பவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் அக்னி ராஜ். சட்டக்கல்லூரி (Law Student) மாணவரான இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு மைனர் மணி என்பவரின் கொலை வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த இவரை கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 05-ஆம் தேதி அன்று, மைனர் மணியின் கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தனர்.
பழிக்குப்பழி:
இந்நிலையில், இதற்கு பழிவாங்கும் எண்ணத்தோடு அக்னி ராஜனின் நண்பர்கள் சேர்ந்து, அக்னி பிரதர்ஸ் என்று ஒரு குழுவை தொடங்கினர். தனது நண்பன் கொலை வழக்கில் ஈடுபட்ட பரமசிவம், அழகுபாண்டி, ஆகாஷ் ஆகிய 3 பேரையும் அடுத்தடுத்து தலையை சிதைத்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தனர். இதனைத்தொடர்ந்து, 4-வதாக சிவகங்கை மாவட்டம், வினோத் கண்ணன் என்பவரை நேற்று (ஆகஸ்ட் 08) காலை பல்லடம் அருகேயுள்ள கரையான்புதூர் என்ற இடத்தில் வைத்து, 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். Schoolgirl Allegedly Molested: கஞ்சா போதையில் பள்ளி மாணவியிடம் சிலுமிசம்.. அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!
இன்ஸ்டாகிராமில் பகிரங்க பதிவு:
இதனையடுத்து, அக்னி ராஜ் கொலை வழக்கில் கைதான பூச்சி இருளப்பன், சக்திவேல், தர்மராஜ், விக்கி ஆகிய 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அவர்களையும் படுகொலை செய்வோம் என அக்னி பிரதர்ஸ் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளனர். அதில், 'கதைக்கு முடிவு சொல்லலாம்.. பகைக்கு..? என பதிவிட்டு, அக்னியின் வேட்டை அட்டகாசமாக நடக்கவுள்ளது. சிந்திய ரத்தம் வீண் போகாது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 'பதில் தரமாக இருந்ததா? எனவும், கொலை தொடரும் என நண்பன் அக்னி ராஜனின் புகைப்படத்தோடு, வினோத் கண்ணன் வெட்டப்பட்ட புகைப்படத்தை சேர்த்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் 3 தனிப்படை குழு அமைத்து அக்னி பிரதர்ஸ் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.