Road Accident: சாலையில் மாடு மோதி விபத்து; கல்லூரி மாணவி படுகாயம்.. பதைபதைக்கும் வீடியோ உள்ளே..!
திருநெல்வேலியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதியதில் மாணவி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 23, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், திருமால் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி. இவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தியாகராஜர் நகர் 2-வது தெரு வழியாகச் சென்றபோது சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென குறுக்காக பாய்ந்தது. இதில், மாணவி சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து (Accident) ஏற்பட்டு பறந்து கீழே விழுந்தார். இந்த வீடியோ காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. Pink Auto: பெண்களின் வாழ்க்கையில் அடுத்த ஒளிவிளக்கை ஏற்றும் தமிழக அரசு; "பிங்க் ஆட்டோ".. உடனே விண்ணப்பிங்க... விபரம் உள்ளே.!
இதனையடுத்து, அப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், மாணவி ஒருவர் மாடு மோதி விபத்தில் சிக்கிக் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, மாணவி மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடு மோதி கல்லூரி மாணவி படுகாயம்: