Virudhunagar Shocker: கோவில் வளாகத்தில் சிலை அமைப்பதில் தகராறு; கொலை கேசில் சிக்கிய பெண் காவல் ஆய்வாளர் காதலருடன் கைது.!

கோவிலுக்குள் நடந்த தகராறில் நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விஷயத்தில், பெண் காவல் ஆய்வாளர் மற்றும் அவரின் காதலர் உட்பட 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டனர்.

Inspector Sathya Sheela | Crime File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay)

மே 29, திருவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் (Srivilliputhur Crime News), அன்னை சத்யா நகர், இந்திரா நகரில் வசித்து வருபவர் ராமர். இவரின் மனைவி அன்னலட்சுமி. தம்பதிகளுக்கு நித்யா, சுவேதா என 2 மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கடந்த மே 21ம் தேதி சொந்த ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், இரவு 11:45 மணிக்கு மேல் சாமி கும்பிட சென்றுள்ளனர்.

ஆவேசம் கொலையில் முடிந்தது: அச்சமயம், அதே ஊரில் வசித்து வந்த ராமசாமி, அவரின் மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார் உட்பட 2 பெண்கள் சேர்ந்து கோவில் வளாகத்தில் சிங்கத்தின் சிலை வைப்பது குறித்து பேசி இருக்கின்றனர். ஊர் பெரியவர்கள் சேர்ந்து கோவிலில் தனிப்பட்ட முறையில் சிங்கம் வைக்க வேண்டாம் என எதிர்ப்பு கூறியுள்ளனர். ராமசாமியின் குடும்பத்தார், ராமரை பார்த்து எங்களிடம் வாங்கிய கடனை திரும்ப தராமல் இருந்து வரும் நீயெல்லாம் எங்களை எதிர்த்து பேசலாமா? என கூறி தாக்கி இருக்கிறார். Cheating On Girlfriend: காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!

இருவர் முதற்கட்டமாக கைது: இதனால் தலையில் படுகாயமடைந்த ராமர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து திருவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் ராமரின் மனைவி அன்னலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், ராமசாமி மற்றும் அவரது மகன் ராஜேந்திரன் ஆகிய நபர்களை கைது செய்தனர். இவர்களுடன் தாக்குதல் நடத்திய ராம்குமார், பெண் காவல் ஆய்வாளர் சத்ய ஷீலா தலைமறைவாகி இருந்தனர். இவர்களை கைது செய்ய தனிப்படை தீவிர நடவடிக்கை எடுத்தது.

தலைமறைவான காவல் ஆய்வாளர் காதலருடன் கைது: அதன்பேரில், பெங்களூரில் பதுங்கியிருந்த இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களை திருவல்லிபுத்தூருக்கு அழைத்து வந்து விசாரணை நடந்தது. விசாரணையில், ராம்குமார் மற்றும் சத்ய ஷீலா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதும், இருவரும் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதும் தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளராக ராம்குமார் இருந்து வந்த நிலையில், அவரைப்பற்றி தவறான வீடியோவை வெளியிட்ட காரணத்தால் அங்கிருந்து கண்டித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Temple Priest Arrested: பெண் பாலியல் விவகாரம்; காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கைது..! 

தொடர் புகார்கள் காரணமாக பணியிட மாற்றம், தற்போது பணிநீக்கம்: பின் மதுரையில் வைசித்து வரும் டிஎஸ்பி-யுடன் டிக் டாக் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு பழக்கமாகி, பின் அடிக்கடி இருவரும் சந்தித்து வந்துள்ளனர். டிஎஸ்பி-யுடன் பழக்கம் இருக்கும்போது, காவல் ஆய்வாளருடன் ராம்குமார் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக டிஎஸ்பி - ராம்குமார் இடையே மோதல்போக்கு நிலவியதால், காவல் ஆய்வாளருடன் ராம் குமாரையும் டிஎஸ்பி விசாரித்து 2 நாட்கள் கழித்து அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறான தொடர் புகார் காரணமாக பெண் காவல் ஆய்வாளர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அங்கிருந்து சொந்த ஊருக்கு திருவிழாவுக்கு சென்றவர், தற்போது கொலை வழக்கில் சிக்கி இருக்கிறார். கொலை வழக்கு புகாரை தொடர்ந்து ராமநாதபுரம் டிஐஜி துறை, காவல் ஆய்வாளரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரின் காதலர் ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதற்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.