Police Inspector Arrested: நகை அபகரிப்பு வழக்கில் காவல் ஆய்வாளர் கைது.. டிஐஜி உத்தரவு..!
மதுரையில் நகை அபகரிப்பு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், நகையை திருப்பி தராததால் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 29, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ்-அபிநயா. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு (Family Dispute) காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக (Police Inspector) பணிபுரிந்து வந்த கீதா இவ்வழக்கை விசாரித்து வந்தார். TN Organ Donation: உடல் உறுப்புக்காக காத்திருக்கும் பலர்.. உடல் உறுப்பு தானம் கட்டாயம்..!
இதனிடையே திருமணத்தின்போது தனது பெற்றோர் வரதட்சணையாக வழங்கப்பட்ட நகைகளை (Gold Jewellery) ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா ஆய்வாளர் கீதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, 95 பவுன் நகைகளையும் ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர் கீதா 1 மாத கால அவகாசம் கேட்டிருந்துள்ளார். பின்னர், அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்த டி.ஐ.ஜி ரம்யபாரதி, கடந்த மே மாதம் ஆய்வாளர் கீதாவை பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டார். பின்னர், கடந்த சில மாதங்களாக மீதமுள்ள நகைகளை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 32 பவுன் தங்க நகை திருப்பித் தராததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் கீதா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)