Government Bus Accident: சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; பயணிகள் படுகாயம்..! ஒருவர் பலி..!

தஞ்சாவூரில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் பலத்த காயமடைந்துள்ளார்.

Accident (File Pic)

ஏப்ரல் 24, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், அரசு பேருந்து அய்யம்பேட்டை அருகே உள்ள மானாங்கோரை பகுதியில் செல்லும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. Lucknow Won By Marcus Stoinis’ Century: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி சதத்தால் லக்னோ அணி த்ரில் வெற்றி..! ருத்ராஜ் சதம் வீண்..!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அய்யம்பேட்டை காவல்துறையினர், அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்களை அவசர ஊர்தியின் (Ambulance) மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இச்சம்பவத்தில் தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement