ஏப்ரல் 24, சென்னை (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (CSK Vs LSG) அணிகள் மோதின. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. National Panchayati Raj Day 2024: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210 ரன்களை குவித்தனர். சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருத்ராஜ் 108 ரன்களும், சிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். பின்னர், 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது. இருந்த போதிலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனிநபராக போராடி ஆட்டத்தை இறுதி வரை எடுத்து சென்றார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ரன்களை அடித்து லக்னோ அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து லக்னோ அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
MARCUS STOINIS, THE HERO...!!!
6,4,4,4 in the 20th over by Stoinis when they needed 17 runs in the final over. 🫡 pic.twitter.com/n7ko52XfC1
— Johns. (@CricCrazyJohns) April 23, 2024