Married Woman Suicide: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..! காரணம் என்ன..?
கடலூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 03, சிதம்பரம் (Cuddalore News): கரூர் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அடுத்த புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் நிவேதிதா (வயது 25). இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் படித்துக்கொண்டிருந்த போது, அதே பல்கலைக்கழகத்தில் படித்த கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை தில்லையம்மன் நகரை சேர்ந்த கபிலர் என்பவருடைய மகன் சுபாஷ் சந்திர போஸ் (வயது 30) என்பவருடம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், பின் காதலாக மாறியது. World Bicycle Day 2024: உலக சைக்கிள் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?.!
இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி அன்று, காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அங்குள்ள தில்லையம்மன் நகர் பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நிவேதிதா தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து, நிவேதிதாவின் தாயார் நேற்று சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதன்பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிவேதிதா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.