Young Girl Died Of Electrocution: லேப்டாப் சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண், மின்சாரம் தாக்கி பலி..!

விருதுநகரில் லேப்டாப் சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 15, ராஜபாளையம் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி ராஜாராம்-செந்தி மயில் (வயது 22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தற்போது, ராஜாராம் துபாயில் பணிபுரிந்து வருகிறார். Teenager Was Beaten To Death: நிலத்தகராறில் வாலிபரை அடித்துக் கொன்ற உறவினர்கள்..!

இந்நிலையில், செந்தி மயில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது, தனது லேப்டாப்பை சார்ஜ் (Laptop Charging) போட்ட படி பயன்படுத்தியுள்ளார். அப்போது, லேப்டாப் சார்ஜ் வயரில் இருந்து திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை சக்தி குமார், உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்து வந்த சேத்தூர் காவல்துறையினர் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.