Tiruppur Shocker: 14 வயது சிறுமியை சீரழித்து வீடியோ எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்த காதலன் கொலை; தந்தை பரபரப்பு செயல்.! திருப்பூரில் படுபயங்கரம்.!

திருப்பூரில் 14 வயதான மகளை காதலிப்பதாக கூறி இளைஞர் ஏமாற்றி இருக்கிறார். இருவரின் தனிமை காட்சிகளை படம்பிடித்து காதலன் நண்பர்களுடன் பகிர்ந்தால், சிறுமியின் தந்தைக்கு மிரட்டல் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காதலன் படுகொலை செய்யப்பட்டதன் பயங்கரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Victim Bhuvaneswaran (24), Death File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay)

ஜூன் 04, மணப்பாறை (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் வசித்து வருபவர் பாண்டியன். இவரின் மகன் புவனேஸ்வரன் (வயது 25). திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் தற்போது தங்கியிருக்கும் புவனேஸ்வரன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே, அப்பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமியான பள்ளி மனைவியுடன் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பின்னாளில் புவனேஷ் காதலாக மாற்றி இருக்கிறது.

தனிமை காட்சிகளை படம்பிடித்த காதலன்:

வயது கோளாறில் காதலில் விழுந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்ற புவனேஸ்வரன், இருவரின் தனிமை காட்சிகளை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனை தனது நண்பர்களிடமும் காண்பித்து இருக்கிறார். இதனை புவனேஷின் நண்பனான தமிழரசன் என்பவர் தனது செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார். Five Killed In Car Accident: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..! 

சிறுமியின் தந்தைக்கு காதலனின் நண்பன் மிரட்டல்:

இந்த விடியோவை தமிழரசன் சிறுமியின் தந்தைக்கு செல்போனில் அனுப்பி வைத்து, ரூ.15 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். மேலும், ரூ.15 ஆயிரம் பணம் தர மறுக்கும் பட்சத்தில், சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகும் எனவும் எச்சரித்து இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன மனைவியின் தந்தை, அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காதலனை கொலை செய்ய தந்தை முடிவு:

புகாரை ஏற்ற காவல் துறையினர் இருதரப்பியும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பியதாக தெரியவருகிறது. இந்த விவகாரத்திற்கு பின்னர் புவனேஸ்வரன் மாணவியை பல இடங்களுக்கு மீண்டும் அழைத்துச்சென்று செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, புவனேஸ்வரனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். Girl Dies After Noodles Get Stuck In Her Throat: தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி சிறுமி பரிதாப பலி; பெற்றோர் பரிதவிப்பு..!

கூலிப்படை ஏவி பயங்கரம்., பணத்திற்காக நண்பன் கொலை:

இதனையடுத்து, தனது திட்டப்படி தமிழரசனை நேரில் சந்தித்து, புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருவதாக பேரம் பேசி இருக்கிறார். இந்த விசயத்திற்கு தமிழரசைன்னும் சம்மதம் தெரிவிக்கவே, கூலிப்படை ஏற்பாடு செய்து காரியம் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புவனேஸ்வரனை தொடர்புகொண்டு "சரக்கடிக்கலாம் வா" என காய்த்த தமிழரசன், திருமுருகன்பூண்டி பகுதிக்கு வரவரழைத்து போதை தலைக்கேறிய புவனேஸ்வரனை காந்தி நகர் பகுதிக்கு அழைத்துச்சென்று கூலிப்படை கும்பல் உதவியுடன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகள் முயற்சி:

ஓடஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட புவனேஸ்வரன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர், புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூலிப்படை ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றியது உறுதியானது. இதனையடுத்து, மாணவியின் தந்தை, தமிழரசன், கூலிப்படை கும்பல் உட்பட 7 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இவர்கள் கைதானால் மட்டுமே உண்மை தெரியவரும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement