Vijayakanth Discharged: 20 நாட்களுக்கு பின்பு வீடு திரும்பும் விஜயகாந்த்: விஜயகாந்த் அறிக்கை!
நடிகரும் தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆன விஜயகாந்த், கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
டிசம்பர் 12, சென்னை (Chennai): கடந்த மாதம் 18ஆம் தேதி தேமுதிக தலைவர் ஆன விஜயகாந்த் (Vijayakanth), சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண இருமல், தொண்டை வலி காரணமாக சிகிச்சை சென்று இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவின.
மருத்துவமனை அறிக்கை: அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், மியாட் மருத்துவமனை நவம்பர் 29 ஆம் தேதி அறிக்கையொன்றை வெளியிட்டது. அதன்படி விஜயகாந்த் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது, எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டது. 2024 Kawasaki Ninja ZX-6R: கவாஸாகி நிறுவனத்தின் புதிய பைக் வெளியீடு: மாஸ் காட்டும் 2024 நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர்.!!
பிரேமலதா விளக்கம்: ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. விஜயகாந்த் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உண்மைகளை மறைக்கிறார்கள் என்றும் கூறி வந்தனர். அதற்கு விளக்கம் தரும் விதத்தில் பிரேமலதா வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.
வீடு திரும்பிய விஜயகாந்த்: அதன்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனைப் பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த்தின் சிகிச்சைகள் மற்றும் உடல் பரிசோதனைகள் முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. Online Order Shocker: ஆன்லைனில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருளை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் மோசடி?.!
பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த்: இந்நிலையில், தேமுதிக பொதுக்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.