டிசம்பர் 12, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமாக செயல்பட்டு வருவது அமேசான். நாளொன்றுக்கு அமேசான் (Amazon Online Delivery) தளத்திலிருந்து 1.6 மில்லியன் பொருள்கள் நாடெங்கும் உள்ள மக்களால் ஆர்டர் செய்யப்பட்டு பெறப்படுகின்றன. விழாக்காலங்களில் சலுகை விலையிலும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இணையவழி வணிகம்: கடைவீதியில் கிடைக்கும் சிறிய பொருட்கள் முதல், விலையுர்ந்த பொருட்களான தொலைக்காட்சி, செல்போன், ஸ்மார்ட்வாட்ச் உட்பட பல்வேறு விஷயங்களும் அமேசானில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இணையவழி வணிகத்தால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நடைபெற்ற வணிக மதிப்பீடு இந்திய அளவில் 2011 பில்லியன் டாலர் ஆகும்.
செல்போனுக்கு பதிலாக வந்த செங்கல் சம்பவங்கள்: முந்தைய காலங்களில் இணையவழியில் விலையுயர்ந்த செல்போன், கேமரா, வாட்ச் போன்ற பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு, அந்த பொருட்களை அனுப்பாமல் மோசடி கும்பல் செங்கல் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி அதிர்ச்சி கொடுத்திருந்தது. Rajini Fans Wait to See Thalaivar: தலைவர் தரிசனத்திற்காக ரஜினிகாந்தின் வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள்: தலைவா தலைவா என கூக்குரலிட்டு அழைப்பு.!
ஹெட்போனுக்கு பதிலாக டூத் பேஸ்ட்: இந்நிலையில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள சோனி ஹெட்போன் (Sony SB910N Headphone) ஆர்டர் செய்த இளைஞருக்கு, பல் துலக்கும் பேஸ்ட் அனுப்பிய சம்பவமானது நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் யாஷ் ஓஜிஹா என்பவர், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அமேசான் நிறுவனத்திடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
ஆசையாக பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி: கடந்த 08ம் தேதி இவருக்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், 02:40 மணியளவில் பார்சலை பெற்று, ஐந்து நிமிடங்களில் பிரித்துப் பார்த்தபோது மோசடி செயல் அம்பலமாகியுள்ளது. பார்சலை பிரித்துப்பார்க்கும்போது நல்வாய்ப்பாக வீடியோ எடுத்தவாறு திறந்ததால், அதுசார்ந்த வீடியோவும் கிடைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அமேசான்: இதுகுறித்து தொடர்ந்து அமேசான் நிறுவனத்திடம் எக்ஸ் பக்கத்தில் இளைஞர் முறையிடவே, அமேசான் நிறுவனம் மேற்கூறிய பிரச்சனை தொடர்பாக விசாரித்து வருகிறது.
Well I ordered sony xb910n and got Colgate lmafao. pic.twitter.com/GpsiLWemwl
— Yash ojha (@Yashuish) December 8, 2023