ஜனவரி 06, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் பிரபு (Tamil Actor Prabhu). இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன். மேலும் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோவாக இருந்தாலும் டைமிங் காமெடிய மூலம் ஸ்கோர் செய்தார். தற்போது அவர் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது என கூறப்படுகிறது. Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுகிறார் மஞ்சரி? வெளியான தகவல்..!
நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை:
இதுகுறித்து வெளியான செய்தியில், ‘நடிகர் பிரபு, தலைவலி மற்றும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை தமனியில் பிளவு ஏற்பட்ட நிலையில் வீக்கம் அல்லது பலூன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின், பிரபு தற்போது நலமாக உள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், அவருடைய குடும்பத்தினர் அவரை கவனித்து வருவதாகவும், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்து கூறி வருகிறார்கள்.