Vijaya Prabhakaran: தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மகன் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்.கே சுதீஷுக்கு தேமுதிக பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Vijaya Prabhakaran: தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Premalatha Vijayakanth & Vijaya Prabhakaran (Photo Credit: @PremalathaVijayakant X)

ஏப்ரல் 30, தர்மபுரி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர், 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு முதல் முறை இன்று விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. Tiruppur Accident: சாலை வளைவில் அதிவேகம்.. கல்லூரி மாணவர் துள்ளத்துடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!

பொறுப்பாளர்கள் நியமனம்:

இந்நிலையில், தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தேமுதிக பொருளாளராக எல்.கே சுதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதி செய்துள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).