AIADMK KP Munusamy Audio: எடப்பாடி தரப்பு அதிமுக கே.பி முனுசாமியின் ரூ.1 கோடி ஆடியோ வெளியானது.. ஓ.பி.எஸ் ஆதரவாளர் பரபரப்பு சம்பவம்..!

இரு துருவங்களாக பிரிந்து எதிரெதிர் அணியாக மோதிக்கொண்டுள்ள அதிமுக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர், தங்களுக்குள் அடுத்த சர்ச்சையை கிளப்ப முதற்கட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Kolathur Krishnamoorthy Vs K.P Munusamy (Photo Credit: ABP Nadu / The Hindu)

பிப்ரவரி 16, சென்னை: அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (J. Jayalalithaa) மறைவுக்கு பின்னர் 2 அணிகளாக உடைந்த அக்கட்சி, டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக (AMMK Party) உதயமானது. ஓ.பன்னீர் செல்வம் (O.Panneer Selvam) - எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) தரப்பு என இருந்தவர்கள், தங்களுக்கு பேசி முடிவுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றினர். ஆனால், இவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் திரைமறைவில் நடந்து வந்தது எனவும் அவ்வப்போது செய்திகள் வந்தன. ஆனால், இருவரும் அதனை திட்டவட்டமாக மறுத்தனர்.

இதற்கிடையில், கடந்த 2021ல் நடைபெற்ற (2021 Assembly Elections Tamilnadu) சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக (AIADMK Alliance) கூட்டணி தோல்வியடைந்து திமுக கூட்டணி (DMK Alliance) ஆட்சியை கைப்பற்றியது. அதிமுகவின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தலுக்கு பின்னர் பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இடையேயான (Cold War Between Edappadi Palanisamy & O Panner Selvam) மோதல் என்பது நேரடியாக சில இடங்களில் வெடித்தது. Fact Check Free Laptops: அரசின் இலவச லேப்டாப் பெற இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள் என மெசேஜ் வருகிறதா?. – மக்களே உஷார்…! 

இவ்வாறான அபாயகட்டத்தில் அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானத்தை நிறைவேற்றி, எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பில் அமரவைத்தனர். இதனால் அதிமுகவில் மீண்டும் இரண்டு அணிகள் அதிகாரபூர்வமாக பிரிந்தன.

கட்சியை தங்களின் கைக்குள் வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி ஒருபுறமும், கட்சி எங்களிடமே உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஒருபுறமும் நீதிமன்றத்தை (Appeal on Court) நாடி கட்சியை தங்களுக்கு என உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இருவரும் கட்சியின் பெயரை கூறி யாரும் முடக்கம் தொடர்பான வேலைகளில் எடுபடவில்லை.

File Image: AIADMK R.B Udhaya Kumar at Erode By Poll Election Campaign Visuals (Photo Credit: Twitter)

மாறாக, ஓ.பன்னீர் செல்வத்தை திமுகவின் (DMK) மறைமுக கூட்டாளி என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விமர்சனம் செய்ய தொடங்கினர். சமீபத்தில் கே.பி. முனுசாமி (K.P Munusamy) ஓ.பன்னீர் செல்வம் குறித்து பேசுகையில், "இரட்டை இலை சின்னம் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் உழைக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் உழைக்க முடியுமா?. அவர் கட்சியை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்" என பேசியிருந்தார்.

இந்நிலையில், கே.பி. முனுசாமிக்கு எதிராக கொந்தளித்துள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர், தேர்தலின் போது நிர்வாகிகள் நியமனம் மற்றும் எம்.எல்.ஏ வேட்பாளருக்கு ரூ.1 கோடி கேட்டது என ஆடியோவை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் வைத்து அவர் செய்தியாளர்களை சந்திக்கையில் இவை நடைபெற்றன.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி (Kolathur Krishnamoorthy), "கட்சியில் பொறுப்பு வழங்குகிறேன் என்று கூறி என்னிடம் ரூ.1 கோடி கே.பி முனுசாமி வாங்கினார். அதனைப்போல, பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். பணத்தை வாங்கும்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு விஷயம் தெரியவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். Owaisi Replies Karnataka BJP President Statement: கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஓவைஸி..!

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ரூ.1 கோடி கேட்டிருந்தார். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கே.பி முனுசாமி எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துள்ளார். தொண்டர்களிடம் பணம் வசூல் வேட்டை நடத்தவே அவர் இருக்கிறார். கே.பி முனுசாமி ஓ.பன்னீர் செல்வம் குறித்து அவதூறு பேசாமல் இருக்க வேண்டும்.

ஓ.பன்னீர் செல்வம் தொடர்பாக அவதூறு பரப்பினால் இன்னும் பல ஆடியோக்கள் வெளியிடப்படும். நான் கே.பி முனுசாமி குறித்து வெளியிட்டுள்ள ஆடியோவுக்கு இரண்டு நாட்களுக்குள் விளக்கம் வரவில்லை என்றால், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆடியோவும் வெளியாகும். ஓ.பி.எஸ் அண்ணன் குறித்து தரம்தாழ்த்தி பேசுவதை கே.பி முனுசாமி கைவிடவில்லை என்றால் வீடியோ வெளியாகும்" என தெரிவித்தார்.

இந்த விஷயம் தொடர்பாக கே.பி முனுசாமி பதில் அளிக்கையில், "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எங்களின் குரல் தான். தேர்தல் செலவுக்காக நான் பணம் கேட்டதை தவறாக திரித்து பரப்புகிறார்கள். அவர்கள் மேற்படி எந்த ஆடியோ, வீடியோ வெளியிட்டாலும் நான் பயம் கொள்ளப்போவதில்லை" என கூறினார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவினர் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றியை கேள்விக்குறியாக்க எதிர்க்கட்சிகள் எடுத்த இழிசெயல் எனவும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். எது எவ்வாறாயினும் ரூ.1 கோடி கேட்டது என்னவோ உண்மை தான் என்பதை ஆடியோவும் உறுதி செய்கிறது, கே.பி முனிசாமியும் உறுதி செய்துவிட்டார்.

ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது (Audio Linked) 

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 16, 2023 07:10 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement