Annamalai Vs Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பார்முலாவை திருப்பிபிடித்த அண்ணாமலை.. பார்சல் அனுப்புவதாக பரபரப்பு பேச்சு.. முழு விபரம் உள்ளே..!
அதற்கான செங்கலை நான் பார்சல் அனுப்பப்போகிறேன். அதற்கு பதில் வரவேண்டும் என அண்ணாமலை பரபரப்பாக தேர்தல் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பிப்ரவரி 21: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை (Erode By Poll) தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமானது சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, நாதக, அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் (AIADMK, DMK, DMDK, NTK, AMMK Parties) வாக்குசேகரிப்பு பணியில் (Election Campaign) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், அரசியலுக்காக எதிரெதிர் கட்சிகளாக குற்றசாட்டுகள் இருதரப்பிலும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக கூட்டணிக்கட்சி (AIADMK Alliance) வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது எய்ம்ஸ் செங்கல் (AIIMS Bricks) பாணியை கையில் எடுத்ததை போல, அண்ணாமலையும் செங்கல் யுக்தியை கையில் எடுத்தார். Turkey Syria Earthquake Today: மீண்டும் துருக்கி-சிரியாவில் பேரதிர்ச்சி சம்பவம்… அடுத்தடுத்த இரண்டு அதிபயங்கர நிலநடுக்கத்தால் 4 பேர் பலி; 213 பேர் படுகாயம்.!
பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், "அந்த செங்கல் திருடனுக்கு எனக்கும் வித்தியாசம் உள்ளது. அந்த செங்கல் திருடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டிடம் அமைக்க கொடுக்கப்பட்ட செங்கலை எடுத்துக்கொண்டு சுற்றி வருகிறார். நான் வைத்துள்ள செங்கல் அது இல்லை. இந்த செங்கல் மத்தியில் பாஜக (BJP) ஆட்சி, 2016 ல் இருந்து 2021 வரை மாநிலத்தில் அதிமுக (AIADMK) ஆட்சியின் சாட்சியமாக இருக்கும் செங்கல்.
ஏனென்றால் இதேபோன்ற செங்கலை வைத்து 11 மருத்துவக்கல்லூரிகளை கட்டிக்கொடுத்துள்ளோம். இது பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் காலையில் 5 மணிக்கு எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு புத்தகத்தை திறந்து பார்த்திருந்தால் தானே தெரியும். மூன்றாம் தலைமுறையில் செல்வ செழிப்பு உள்ள குடும்பத்தில் பிறந்தவருக்கு படிப்பை பற்றி என்ன தெரியும். Ulunthurpet Accident: அலட்சியமாக வந்த டூ-வீலரில் இருந்த உயிர்களை காப்பாற்ற நினைத்த ஓட்டுநர்.. நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து.!
11 மருத்துவக்கல்லூரியில் உங்களைப்போன்ற, என்னைப்போன்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஏழை-எளிய பிள்ளைகள் படித்து வருகிறார்கள். இதற்கு காரணம் இந்த செங்கல் தான். இந்த செங்கலை பார்சல் செய்து உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்போகிறோம். கடந்த 2009ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தர்மபுரியில் சிப்காட் அமைப்போம் என திமுகவினர் தேர்தல் வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், 2023ம் ஆண்டு பிறந்தும் தர்மபுரி சிப்காட் (Dharmapuri Sipcot) அமைக்க ஒரு செங்கல் கூட வரவில்லை. இதனால் செங்கலை செங்கல் திருடன் உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்போகிறோம். நாம் கட்டிக்கொடுத்த மருத்துவமனை, நெடுஞ்சாலை போன்ற பல விஷயங்களுக்கு செங்கல் உதவி செய்துள்ளது. மத்திய - மாநில அரசின் ஒற்றுமையை பறைசாற்றுவதே இந்த செங்கல்" என பேசினார்.