Nirmala Sitaraman: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்; ராகுல் காந்தி கடும் கண்டனம்.!
ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அதிகரித்த சர்ச்சை காரணமாக சீனிவாசன் மன்னிப்பு கேட்ட நிலையில், அதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
செப்டம்பர் 13, புதுடெல்லி (New Delhi): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி வரி தொடர்பாக அன்னபூர்ணா நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், தனது தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து பேசி இருந்தார். இதனை கேட்ட நிதியமைச்சர் உட்பட மேடையில் இருந்தவர்கள், தங்களது புன்முறுவலை வெளிப்படுத்தி, விரைவில் அங்கு இருந்தவர்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதனிடையே, அன்னபூர்ணா உரிமையாளர் பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, எதிர்கட்சிகளிடையே கருத்து விவாதத்தை உருவாக்கியது. அதேநேரத்தில், மத்திய அரசின் ஆதரவாளர்கள், நிதியமைச்சருக்கு ஆதரவாக தங்களின் கருத்தை முன்வைத்து, சீனிவாசனை வறுத்தெடுத்து வந்தனர். இதனால் ஒருகட்டத்தில் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரிடம் மன்னிப்புகேட்டார். இந்த விஷயம் மீண்டும் எதிர்கட்சிகளிடையே பெரும் விவாதம் & கண்டனத்தை உருவாக்கி இருக்கிறது. ITI Admission: அரசு ஐடிஐ பயில விருப்பமா நேரடி சேர்க்கை நீட்டிப்பு செய்து உத்தரவு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ராகுல் காந்தி கடும் கண்டனம்:
இந்நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், "கோவையில் அன்னபூர்ணா உணவகம் போல, சிறுவனாக உரிமையாளர்கள், அரசின் பொதுவான ஊழியர்களிடம் எளிமையான ஜிஎஸ்டி முறை குறித்து கேட்டபோது, அவரது கோரிக்கையை ஆணவம், அவமரியாதையுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம், அணுக இயலாத வங்கி முறைகள், வரிப்பரிப்பு, பேரழிவு ஜி.எச்டி என தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே இதனை சிறுவணிக உரிமையாளர்கள் எதிர்கொண்டு இருக்கின்றனர்.
இறுதியாக அவர்களுக்கு அவமானமும் மிஞ்சி இருக்கிறது. இதில், ஒரு கோடிஸ்வர நண்பர், விதிகளை வளைக்கக்கூடியவர், சட்டங்களை மாற்ற முற்படுபவருக்கு, தேசிய சொத்துக்களை பெற, அவருக்கு மோடி ஜி சிவப்பு கம்பளத்தை விரித்து வருகிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பலவீனமான ஈகோவுடன் புண்படுத்தும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பதே இங்கு அவமானமாக தெரிகிறது. பல ஆண்டுகளாக எம்.எஸ்.எம்.இ-இடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். திமிர்பிடித்த அரசு மக்கள் சொல்வதை கேட்டு, எளிய ஒரே வரி விகிதத்தை கடைபிடித்தால், இலட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
தனது பேச்சுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரிடம் வருந்துவதாக சீனிவாசன் பேசிய காணொளி:
ராகுல் காந்தி அன்னபூரணா உரிமையாளர் வருத்தம் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள காணொளி: