Sendurai Accident: கார் மோதி சாலையோரம் சென்ற பள்ளி மாணவர் பரிதாப பலி; ஆவேசத்தில் காரை சேதப்படுத்திய பொதுமக்கள்.!
சாலைகளில் பயணிக்கும்போது அதிவேகத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களின் காரணமாக ஏற்படும் விபத்துகள் நொடியில் விலைமதிக்க இயலாத உயிர்களை காவு வாங்குகிறது.
பிப்ரவரி 06, செந்துறை (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, ராயபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் கே.வாசன் (வயது 16). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மணிகண்டன் (வயது 15). இருவரும் பாலிய நண்பர்கள் ஆவார்கள். வாசன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கார் மோதி சிறுவன் பலி: இருவரும் நேற்று மாலை அரியலூர் - செந்துறை சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் சாலையின் குறுக்கே வந்த எஸ்யுவி சொகுசு கார் ஒன்று, சிறுவர்களின் மீது மோதி இருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், வாகனத்தை அங்கேயே நிறுத்தி இருக்கிறார். Gobi Manchurian Banned: கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு சுகாதாரத்துறை அதிரடி தடை; காரணம் என்ன?..! விபரம் இதோ.!
காரை அடித்து நொறுக்கிய மக்கள்: விபத்தைக்கண்டு ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், காரை அடித்து நொறுக்கி, செந்துறை - அரியலூர் சாலையை மறித்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த செந்துறை காவல் துறையினர், உள்ளூர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிகமாக கைவிடப்பட்ட போராட்டம்: விபத்தில் 15 வயதுடைய சிறுவன் கே.வாசன் பலியாகிவிட, அவரின் நண்பர் மணிகண்டன் படுகாயத்துடன் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.