Petrol Bomb Attack On Govt Bus: அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது..!
அரியலூரில் காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்துவதற்காக, அவரது காதலன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மே 30, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி அருகே நரசிங்கபாளையம் காலனி தெருவை சேர்ந்த அருமைராஜ் என்பவரது மகன் பிரேம்குமார் (வயது 21). இவர், டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்துள்ளார். பிரேம்குமார், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அந்த பெண் இவருடன் பேசாமல் இருந்துள்ளார். Security Tightened In Newyork for IND Vs PAK: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி மைதானங்களுக்கு பலத்த பாதுகாப்பு..!
இதனையடுத்து, நேற்று காலை 7.30 மணி அளவில், அந்த பெண் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். இதனை கவனித்த பிரேம்குமார், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், தனது காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்துவதற்காக பெட்ரோல் குண்டை வீசினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர், உடனே பேருந்தை நிறுத்தினார். இதனால், பெட்ரோல் குண்டு (Petrol Bomb) சாலையில் விழுந்து பயங்கரமாக தீப்பிடித்தது.
மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் பயத்தில் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீன்சுருட்டி காவல்துறையினர், சம்மந்தபட்ட பிரேம்குமாரை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.