Goods Train Derailed: சென்னை நோக்கி வந்த சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து: தென்மாவட்ட இரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி..!
சாலைகளின் தரம் என்பது வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஆய்வுகள் அவசியம். அதேபோல, இரயில் வழித்தடமும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
டிசம்பர் 11, செங்கல்பட்டு (Chengalpattu News): தூத்துக்குடியில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி, இரும்பு பாரம் ஏற்றிய சரக்கு இரயிலானது நேற்று இரவு 10:30 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூரை கடந்து வந்துகொண்டு இருந்தது.
தடம்புரண்ட சரக்கு இரயில்: இந்நிலையில், திடீரென இரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதனைத்தொடர்ந்து, விபத்து தொடர்பாக தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. Rajasthan Car Crash: கார் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாப பலி: தேசிய நெடுஞ்சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்.!
மீட்பு பணிகள் தீவிரம்: தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இரயில் நிலையங்களில் இருந்து இரயில்வே பணியாளர்கள் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு, இரயிலை மீட்கும் பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரயில் சேவை பாதிப்பு: இதனால் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் இரயில் சேவையும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரவிருந்த இரயில் சேவையும், செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார இரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.