24 Year Old Train Passenger Suffers Jaw Dislocation (Photo Credit : @GMSRailway X)

அக்டோபர் 19, பாலக்காடு (Palakkad News): தீபாவளியை முன்னிட்டு வெளியூரில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் கொட்டாவி விட்ட நிலையில், திடீரென தாடை சிக்கிக்கொண்டது. இதுகுறித்து அவர் பேச முடியாமல் சிரமப்பட்ட நிலையில், சக பயணிகள் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் திறந்த வாயை மூட முடியாமல் இளைஞர் அவதிப்பட்டதால் உடனடியாக மருத்துவ உதவிக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ரயில் பாலக்காடு நிலையம் வருவதற்குள் ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் இருந்துள்ளது. Coimbatore: டெலிகிராம், வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்.. ரூ.30 லட்சம் அபேஸ்.. மக்களே உஷார்.!

வாயை மூட முடியாமல் தவித்த இளைஞர்:

ரயில் பாலக்காடு வந்ததும் இளைஞருக்கு ரயில் நிலையத்திலேயே வைத்து மருத்துவர் ஜித்தின் முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் இளைஞரின் தாடை சரி செய்யப்பட்டது. மருத்துவர் இளைஞருக்கு உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில், இளைஞர் மருத்துவரின் கையை பிடித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதை தொடர்பாக மருத்துவர் கூறுகையில், வாலிபர் கொட்டாவி விடும் போது ஜா டிஸ்லொகேஷன் ஆகிவிட்டது. இதனை தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்றும் கூறலாம். இதனால் வாய் மூடும்போது சிரமமும், பேச முடியாமல் போவதும் இருக்கும். உரிய மருத்துவ சிகிச்சை பெற்றால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கும் தள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இளைஞருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ: