Chennai Encounter: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரௌடிகள் என்கவுண்டர்: மிரட்டல் சம்பவத்துக்கு நெத்திப்பொட்டில் முற்றுப்புள்ளி.!
பணம் கொடுக்க மறுத்த அதிமுக பிரமுகரை, 6 பேர் கும்பலாக சேர்ந்து கொலை செய்த ரௌடிகள், இறுதியில் காவலர்களையே கொலை செய்யும் அளவு துணித்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
அக்டோபர் 12, மீஞ்சூர் (Chennai News): சென்னையில் உள்ள செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் பார்த்தீபன். அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பாடியநல்லூர் அங்காளம்மன் கோவில் திடலில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, 6 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல் துறையினர், 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்தனர். இவர்களில் 4 பேர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ரௌடிகள் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இரண்டு பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்களில் சண்டே சதீஷ் செங்குன்றம் ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். முத்து சரவணன் எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இருவரும் காவல் துறையினரால் தேடப்பட்டு வைத்த நிலையில், தலைமறைவு வாழ்க்கையின்போதே பலரையும் மிரட்டி பணம்பறித்தும் வந்துள்ளனர்.
சமீபத்தில் இவர்களை கைது செய்ய அதிகாரிகள் தீவிர முனைப்புடன் பணியாற்றி வந்தனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர், செங்குன்றம் துணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் மேற்பார்வையில் தனிப்படை இருவரையும் வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில், ரௌடிகள் இருவரும் மீஞ்சூர் - வண்டலூர் சாலையில் இருக்கும், மீஞ்சூர் சுங்கச்சாவடி, மாரம்பேடு கண்டிகை கும்மனூர் வயல்வெளியில் இருந்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உதவி ஆணையர் ஜவஹர், காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் அடங்கிய காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். Benefits of Ponnanganni Keerai: கண் பிரச்சனை முதல் காசநோய் வரை.. பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் பொன்னாங்கண்ணி கீரை: நன்மைகள் விபரம் இதோ.!
ரௌடிகள் முத்து சரவணன், சதீஷ் ஆகியோரை கைது செய்ய அமைதியாக வெளியே வருமாறு எச்சரிக்க, தப்பிச்செல்லும் எண்ணத்தில் இருந்த ரௌடிகள் காவலர்களை எதிர்த்து திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் காவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், பிரபு ஆகியோரின் மீது குண்டுகள் பாய்ந்தன.
இதனால் காவல் துறையினர் தங்களின் சுயபாதுகாப்பை உறுதி செய்து, தற்காப்பிற்காக துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரௌடி சரவணனின் மீது 3 குண்டுகள் பாய்ந்தது. காவல் ஆய்வாளர் ரமேஷ் சரவணனை சுட்டார். உதவி ஆய்வாளர் அசோக் சதீஷை சுட்டார்.
இந்த சம்பவத்தில் ரௌடிகள் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்தனர். காவலர்களின் அதிரடி துப்பாக்கிசூட்டில் பலியான இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த காவலர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரின் மீது தனித்தனியே தலா 25 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இவற்றில் 6 கொலை வழக்கும் ஆகும். பாடியநல்லூர், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள், தொழிற்சாலையில் மிரட்டி பணம் பறித்து வாழ்க்கையை நடத்தி வந்த ரௌடிகள், அதிமுக பிரமுகர் பார்த்தீபனிடமும் பணம் கேட்டு மிரட்டிய இருக்கின்றனர். அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கொலை நடந்துள்ளது. இறுதியில் குற்றவாளிகள் என்கவுண்டரில் பலியாகி இருக்கின்றனர்.