Clash Between Transgender And Police: திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல்.. கற்களை வீசி ஆர்ப்பாட்டம்..!
கன்னியாகுமரியில் திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செப்டம்பர் 26, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவில் (Kavalkinaru To Nagercoil) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பணகுடி அருகே திருநங்கைகள் (Transgenders) சிலர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் இடைமறித்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற பணகுடி காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு விரட்டியுள்ளனர். இதனால் திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
இதனையடுத்து, சற்று நேரத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணகுடி காவல்நிலையத்திற்கு திரண்டு வந்து, கற்களால் வீசி அங்குள்ள பூந்தொட்டிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். உடனே காவல்துறையினர் அங்கிருந்து அவர்களை விரட்ட முயன்றனர். அப்போது, திருநங்கை ஒருவர் ஆடைகளை கலைந்து எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காவல்துறையினர் லத்தி ஜார்ஜ் செய்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கைகளை அடித்து விரட்டிய காவல்துறையினர்: