Deforestation: வனத்துறையை சீரழிக்கும் மற்ற துறைகள்.. மீதி இருக்கும் நிலங்கள் வெறும் 7.6 சதவீதம் மட்டுமே.!

வளர்ச்சி, போக்குவரத்து வசதியை காரணம் காட்டி, வனத்துக்குள் பல்வேறு சாலைகள் அமைப்பதால், வனப்பகுதி நிலங்களை பிற அரசு துறைகளே அழிப்பதாக வனத்துறையினர் புலம்புகின்றனர்.

Deforestation (Photo Credit: Pixabay)

அக்டோபர் 11, சென்னை (Chennai): தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி போன்ற பகுதிகளில் வனப்பகுதி அதிகமாக உள்ளது. வட தமிழகத்தினை பொருத்தவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மலை, காடுகள் குறைவு என்பதால் பசுமையும் குறைவுதான். அதுமட்டுமில்லாமல் சென்னைக்கு அருகில் இந்த மாவட்டங்கள் இருப்பதினால் நகரமயமாதல் காரணமாக இங்கு உள்ள வனப் பகுதியை அதிகரிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் வெப்பநிலை, இரைச்சல், சுகாதாரமற்ற காற்று போன்றவற்றினுடன் மக்கள் இணைந்து வாழ வேண்டியுள்ளது.

இந்திய வனத்துறையின் சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் இந்த மாவட்டங்களில் 10% நிலங்கள் கூட வனப்பகுதியாக இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1704 சதுர கிலோமீட்டர். இது 33 சதவீதம் அதாவது 562 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு வெறும் 36.8 சதுர கிலோமீட்டர் தான் வனப்பகுதியாக உள்ளது. இது வெறும் 2.1 சதவீதம் மட்டுமே ஆகும். வானிலை: இன்று 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2945 சதுர கிலோமீட்டர். இங்கு 33 சதவீதமாக 971 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் 162 சதுர கிலோமீட்டர் மட்டுமே வனப்பகுதியாக உள்ளது. அதாவது 5.5 சதவீதம் மட்டுமே. இதனால் வனத்தில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றனர். பல மான்கள் யானைகள் சாலையை கடக்க முயலும் பொழுது வாகனத்தில் மோதி உயிர் இழப்புகள் நேர்கின்றன. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் போக்குவரத்து துறைகள் வனத்துக்குள் சாலை அமைக்க வேண்டும் என்று வனத்துறைக்கு சிரமத்தை அளிக்கின்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு வனத்துறை அதிகாரி கூறியதாவது, "வனத்துறை சார்பில், அரசு, தனியார் இடங்களிலும், கல்லுாரி வளாகங்களிலும் அதிகளவு மரங்களை நடுகிறோம். ஆண்டுதோறும் மரம் வளர்ப்பது தொடர்பாக அரசு திட்டங்களை பொறுத்து தொடர்ந்து மரம் நட்டு வளர்க்கிறோம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளர்ச்சி திட்டங்கள் வருகின்றன. இதனால், ஏற்கனவே உள்ள வனப்பரப்பை பாதுகாக்க முயற்சி செய்கிறோம்.

ஆனால், வளர்ச்சி பணிகளுக்காக இருக்க கூடிய வனப்பகுதியை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, பல இடங்களில் நெடுஞ்சாலைக்கு வனத்துறை இடத்தை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால், வனப்பகுதிக்கும், விலங்குகளுக்கும் தொல்லை தருவதாக அமைகிறது. ஏற்கனவே உள்ள அரசு இடங்களை வனப்பகுதியாக மாற்ற, காஞ்சி, செங்கல்பட்டில் வாய்ப்பு குறைவு. இதனால், எந்த பகுதியிலும் வாய்ப்பு கிடைத்தாலும் மரம் வளர்க்க ஊக்குவிக்கிறோம். ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க அனைத்து துறை சார்பிலும் முயற்சிகள் எடுக்கின்றனர். எனவே, இருக்க கூடிய வனப்பகுதியை காத்து, அவற்றில் வேட்டை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறோம்" என்றார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement