Mask Advisory Issued as Viral Fever Spreads in Tamil Nadu (Photo Credit : @sunnewstamil X)

செப்டம்பர் 03, சென்னை (Chennai News): பருவ காலத்தில் வைரஸ் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே கேரளாவில் மூளையை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் அமீபா வைரஸ் பரவி அடுத்தடுத்த மரணங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் அவ்வப்போது திடீர் மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் முன்னெடுத்துள்ளது. Gold Rate Today: வரலாறு காணாத உச்சம்.. 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்து ரூ.78,000ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 

முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் :

மேலும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல்களை குறைக்க முகக்கவசம் கட்டாயம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்கள் திருமணம் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்றால் முகக்கவசம் அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.