செப்டம்பர் 18, பிரேசிலியா (World News): அமேசான் மழைக்காடுகள் (Amazon Rainforest), தென் அமெரிக்காவில் சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடுகளாகும். உலகில் ஆக்ஸிஜனை அதிகளவில் உற்பத்தி செய்வதால் 'பூமியின் நுரையீரல்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசூலா, கொலம்பியா, கயானா, ஈகுவடார், சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான தாவரங்கள், உயிரினங்கள் வசிக்கின்றன. இதனிடையே, அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. Viral Video: ஆற்றில் முதலைக்கு முத்தமிட்ட மனிதன்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
அமேசான் காடுகள் அழிப்பு:
அமேசான் காடுகள் அழிப்பை தடுத்து நிறுத்தி, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இயற்கை பேரழிவுகள் தொடர்பாக உலகளவில் ஆய்வு செய்யும் லண்டனைச் சேர்ந்த 'குளோபல் விட்னஸ்' என்ற ஆய்வு நிறுவனம், அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 12 ஆண்டுகளில் அமேசான் காடழிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரணம்:
குளோபல் விட்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2024 வரையான காலக்கட்டத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேரும், பெருவில் 225 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கடந்த 2024ஆம் ஆண்டில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 82 சதவீதம் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.