TN Govt Announce Relief Fund: துபாயில் 2 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்த விவகாரம்; ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு முதல்வர்.!

குடும்பத்தின் உயர்வுக்காக வெளிநாடு சென்று உழைத்ததவர்களில் 2 பேர் தீ விபத்தில் மரணித்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், நிவாரண நிதியும் அளித்துள்ளார்.

Dubai Fire Accident | Politician MK Stalin File Picture (Photo Credit: Kheej Times / Facebook)

ஏப்ரல் 17, சென்னை (Tamilnadu News): துபாய் (Dubai) நாட்டில் உள்ள அல்-ராஸ், பேரா பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் (Sankarapuram, Kallakurichi), ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் மகன் இமாம் காசிம் (வயது 43) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர் சலியா குண்டு என்பவரின் மகன் முகமது ரபிக் (வயது 49) ஆகியோர் தங்களின் குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருவரும் (Dubai Appartment Fire Accident) உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்றது. அவர்களின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர, இந்திய தூதரகம் (Indian Embassy) மூலமாக தமிழ்நாடு வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. Vedhanth Madhavan: மலேஷிய மண்ணில் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை இந்தியாவுக்காக வென்ற தமிழ் நடிகரின் மகன்..!

TN Govt Statement about Dubai Fire Accident 2 Died Issue Relief Fund Announcement

இந்த நிலையில், உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (M.K Stalin), அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு, தலா ரூபாய் 10 இலட்சம் நிவாரணம் (Relief Fund) வழங்க உத்தரவிட்டுள்ளார். விரைவில் இருவரின் உடலும் தமிழகம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய குடியிருப்பு விடுதி மற்றும் அடுக்குமாடி கட்டிடம் தீ விபத்தில் கேரளா தம்பதியினர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த 16 நபர்களில் 4 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement