Mettur Dam: நீர்வரத்து தொடர் அதிகரிப்பு; மேட்டூர் அணையில் இருந்து 1 இலட்சம் கன அடி நீர் வெளியேற்றம்.!
நீர்வரத்து அதிகரித்த காரணத்தால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூரில் இருந்து நீரின் வெளியேற்றம் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31, மேட்டூர் (Mettur News): சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில், 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை உள்ளது. தென்மேற்குப்பருவமழை (Southwest Monsoon) இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் காவிரி (Kaveri River) நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. School Student Was Brain Dead: தலையில் ஈட்டி பாய்ந்து 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; கணித ஆசிரியர் கைது..!
காவேரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினமே 116 அடியை கடந்து பதிவானது. இதனால் ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டபோதிலும், அணையில் இருந்து கூடுதல் நீர் எந்நேரமும் வெளியேற்றம் (Mettur Dam Water Discharge) செய்யப்படலாம் என கூறப்பட்டது. மேலும், சேலம், கரூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி உட்பட டெல்டா (Delta Districts in Tamilnadu) மாவட்டங்களில், காவேரியின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. Dentist Arrested In Pocso Act: மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பல் மருத்துவர் போக்சோவில் கைது..!
காவேரி ஆற்றில் அலட்சியமாக குளிக்க முயற்சிக்க வேண்டாம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் காலை 7 மணிக்கு 1 இலட்சம் கன அடி நீர் திறக்கப்படும், காலை 8 மணிக்கு 1.25 இலட்சம் கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கலில் இருந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 1 இலட்சம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நீரின் வெளியேற்றம் அதிகரிக்கப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)