Pocso Act (Photo Credit: @BarBench Twitter)

ஜூலை 30, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 37). இவர் பல் மருத்துவராக (Dentist) பணியாற்றி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக, நேற்று மாலை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய நிலையில், சிறுமியின் பெற்றோரிடம் குறிப்பிட்ட மருந்தை எழுதி கொடுத்து, அதனை மருந்துக் கடையில் (Medical) வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார். Three People Arrested: வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது.. 8 லிட்டர் சாராயம் பறிமுதல்..!

பின்னர், சிறுமியிடம் மருத்துவர் பாலியல் அத்துமீறலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி மருத்துவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது, தனது தாயாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதே நேரத்தில் மருந்து வாங்கச் சென்ற சிறுமியின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது, மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பல் மருத்துவர் அப்துல் மஜித்தை, போக்சோ சட்டத்தில் (Pocso Act) கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.