Kanniyakumari Rain: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு.. மறைந்து போன திற்பரப்பு அருவி..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவி இருந்த இடம் கூட தெரியாத அளவிற்கு தண்ணீரால் மூழ்கடிக்கபட்டுள்ளது.
டிசம்பர் 19, கன்னியாகுமரி (Kanyakumari): கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. Chennai GM Chess Championship: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்.. அர்ஜுன் எரிகைசி வெற்றி..!
மறைந்து போன திற்பரப்பு அருவி: அதுமட்டுமின்றி பெய்த கன மழையின் காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவி இருந்த இடம் கூட தெரியாத அளவிற்கு தண்ணீரால் மூழ்கடிக்கபட்டு செல்கிறது.மேலும் அருவிப்பகுதிக்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.