டிசம்பர் 18, சென்னை (Chennai): சென்னையில் நடைபெறும் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி டிசம்பர் 15 தொடங்கியது. மேலும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கின்றனர். 7 ரவுண்ட் ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியில் இவர்கள் விளையாடுவார்கள். இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.50 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.15 லட்சமும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 லட்சமும், 3வது இடத்தை பிடிப்பவர்கள் ரூ.8 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதேபோல் 4வது முதல் 8வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3.5 லட்சம், ரூ.2.5 லட்சம், ரூ.2 லட்சம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. South TN Rains: தென்தமிழகத்தில் குறைந்தது மழை.. நெல்லை, தூத்துக்குடியில் மீட்பு பணிகள் தீவிரம்..!
அர்ஜுன் எரிகைசி வெற்றி: இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் 3-வது நாளான நேற்று, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியும், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவும் மோதினர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அர்ஜுன் எரிகைசி (Arjun Erigaisi) 71-வது நகர்த்தலில் வெற்றியைப் பெற்றார்.