Montha Cyclone Live Tracker (Photo Credit: Windy.com)

அக்டோபர் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த நிலை புயலுக்கு முந்தைய இறுதி நிலை ஆகும். இதனால் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் கரையை கடப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது. தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா புயல் (Montha Cyclone), ஆந்திரப் பிரதேசம் மாநிலம் காக்கிநாடா மாவட்டம் மசூலிப்பட்டினம் இடையே கரையை நாளை மறுநாள் (அக்.28) கடக்கிறது. நாளைய வானிலை: தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.! 

மோன்தா புயல் நேரலை (Montha Cyclone Live Tracker):

இந்த புயல் கரையை மணிக்கு 10 கிமீ வேகத்தில் நெருங்கி வருகிறது. தற்போதைய நிலையில், மோன்தா புயல் (Montha புயல்) சென்னையில் இருந்து 790 கிமீ தொலைவில் வங்கக்கடலில் இருக்கிறது. தொடர்ந்து, இது ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகர்ந்து வருவதால், அங்குள்ள பல மாவட்டங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கரையை கடக்கும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில மீட்பு படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மோன்தா புயலின் நிலையை Windy.comல் நேரலையில் பார்க்கலாம் (Watch Montha Cyclone Live Tracker):