Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!
நாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு என பரபரப்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிப்ரவரி 10, வலையங்குளம்: மதுரையில் (Madurai) உள்ள வலையங்குளத்தில் வைத்து மாற்று கட்சியினர் அதிமுகவில் (AIADMK Meeting) இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு மாற்று கட்சியினரை வரவேற்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K. Palaniswami), கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் முன்பு உரையாற்றினார்.
மேடையில் அவர் பேசியதாவது, "தங்கம் தென்னரசு (Thangam Thennarasu, DMK Minister) ஊழல் குறித்து எடப்பாடி பேசுவதற்கு தகுதி இல்லை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் ஊழல் (Corruption) இதைப்பற்றி பேசுவது?. எதிர்க்கட்சியில் இருக்கும் அதிமுகவே அதைப்பற்றி பேச தகுதி உடைய கட்சி. இந்தியாவில் உள்ள பல மாநிலத்தில் ஊழலுக்காக எந்த அரசும் கலைக்கப்படவில்லை. ஆனால், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக (DMK Govt Dismissed due to Corruption) தான்.
அக்மார்க் ISI முத்திரை போல ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்பதை குத்தியுள்ளார்கள். யாரை பற்றி ஊழல் குறித்து கேட்டாலும் திமுகதான் என கூறுவார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது திமுக. தமிழகத்தில் ஊழல் என்ற விதையை விதைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி (M. Karunanidhi). ஊழலின் ஊற்றுக்கண் திமுக.
திமுக ஆட்சியில் எந்த துறையில் ஊழல் இல்லை என்பது தான் கேள்வி. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (M.K Stalin) கூறுவதை போல மாநிலம் ஊழல் செய்வதில் தான் நம்பர் 1 ஆக இருக்கிறது. ஒரு சான்றிதழ் வாங்க கூட இலஞ்சம். இதுவே விடியா திமுக ஆட்சியின் அவலம். 8 அமைச்சர்கள் (DMK Ministers) அதிமுகவில் (AIADMK) இருந்து விலாசம் பெற்று திமுகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். Global Investors Summit 2023: லக்னோ முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி..!
இதனை மறந்து யாரும் பேசவேண்டாம். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவால் (M.G.R & Jayalalithaa) அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி (V. Senthil Balaji) என்ற மின்துறை அமைச்சர் ஒரே 5 ஆண்டில் அதிமுக, திமுகவில் (DMK) நின்று தேர்தலில் வெற்றி பெறுகிறார். இவர் 5 கட்சிகள் சென்று வந்தவர். அவரை தான் ஸ்டாலின் புகழுகிறார்.
திமுகவில் இரவில் பகல் பாராது உழைத்தவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுகவினர் அதிமுக குறித்து பேசுவதற்கு தகுதியில்லாதவர்கள். எம்.ஜி.ஆருக்கு (M.G. Ramachandran) நாமே வாரிசு, ஜெயலலிதாவுக்கும் நாமே வாரிசு, நாமே பிள்ளைகள். இருபெரும் தலைவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இவர்கள் என்றும் மக்களை பற்றியே சிந்தித்தார்கள்.
ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், அவர்களது பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து எப்போதும் சிந்திப்பார்கள். அதனாலேயே இந்தியாவிலேயே தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. அதிமுக 33 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. இந்த 33 ஆண்டுகளில் தான் ஏழைகள் உயர, கல்வியில் முன்னேற்றம் அடைய பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன" என்று கூறினார்.