சின்ன ஊறுகாய் தானே என கம்பீரமாக பேசிய ஹோட்டல் உரிமையாளர்; ரூ. 35,000 அபராதம் விதித்து கலங்கடித்த நீதிமன்றம்..!

35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Pickle | Judgement File Pic (Photo Credit: YouTube | Pixabay)

ஜூலை 25, விழுப்புரம் (Vilupuram News): விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில், 25 பார்சல் சாப்பாட்டை ரூ. 2 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். அதில், ஊறுகாய் (Pickle) உட்பட 11 வகையான உணவுப்பொருட்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனை வீட்டில் வந்து பார்த்தபோது, பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளார். Tamil Pudhalvan Scheme 2024: உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக மாதம் ரூ.1000/-... ரூ.401 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

ஆனால், இதற்கு ஓட்டல் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (Consumer Court) ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சாப்பாட்டிற்கு ஊறுகாய் வழங்காமல் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு ரூ. 35 ஆயிரம் அபராதமும், ஊறுகாய்க்கு உரிய பணத்தையும் ரூ. 25 வழங்க உத்தரவிட்டது.

மேலும், 45 நாட்களுக்குள் பணத்தை செலுத்த தவறினால், மாதம் 9 சதவீத வட்டியுடன் அபராதத் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.