K Armstrong: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தொடர்புடையவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Thirumalai | K Armstrong (Photo Credit: @RajeshS50119232 / @maaran_pandi X)

ஆகஸ்ட் 26, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பெரம்பூரை சேர்ந்த தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 05 ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மறைந்த ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொண்ணை பாலா, அவரின் கூட்டாளிகள், வழக்கறிஞர்கள் மலர்க்கொடி, சதிஷ், முன்னாள் அரசியல்கட்சி நிர்வாகிகள் பொற்கொடி, அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் கே. திருவேங்கடம் என்பவர் மட்டும் விசாரணையின்போது அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். எஞ்சியோரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ளவர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது. 6-Year-Old Girl Rape: 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை; புரட்சி பாரதம் கட்சிப்பிரமுகர் போக்ஸோவில் கைது.! 

திருமலை மருத்துவமனையில் அனுமதி:

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி திருமலை என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள காரணத்தால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு காவலில் எடுக்கப்பட்டு விசாரணையில் இருந்து வந்த திருமலை, திடீரென நேற்று இரவில் நெஞ்சு வலியை எதிர்கொண்டார். இதனால் உடனடியாக அவர் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதியான திருமலை, மறைந்த ரௌடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளிகளின் ஒருவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள்: