Dharmapuri Shocker: தர்மபுரியை அதிரவைத்த இரட்டைக்கொலை; ஆண் - பெண் சடலமாக மீட்பு.! பதறவைக்கும் தகவல்.!
அடையாளம் தெரிய வகையில் முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆணின் சடலம் மற்றும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் சடலமும் அதியமான்கோட்டை பகுதியில் மீட்கப்பட்டது.
செப்டம்பர் 25, அதியமான்கோட்டை (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை (Adhiyamankottai Murder), தடங்கம், வெத்தலக்காரன்பள்ளம், செங்காளம்மன் கோவில் பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டை இருக்கிறது. இந்த பகுதிக்கு 600 மீட்டர் தொலைவில், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்ணின் சடலம், கத்திக்குத்து காயத்தோடு அழுகிய நிலையில் இருந்தது. இருவருக்கும் வயது 55 முதல் 50 வரை இருக்கலாம் என தெரியவருகிறது.
அதிகாரிகள் விசாரணை:
அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியவாறு இருந்த சடலம் குறித்து, அவ்வழியாக சென்ற நபர்கள் அதியமான்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சடலமாக கிடந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என உறுதி செய்த அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்த விசாரணையை தொடங்கினர். Ulunthurpet Accident: திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வரும்போது குறுக்கே வந்த எமன்; புளியமரத்தில் மோதி 6 பேர் பரிதாப பலி.!
ஆணின் முகம் சிதைத்து கொலை:
நிகழ்விடத்திற்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி மகேஸ்வரனும் விரைந்து விசாரணை நடத்தினார். ஆணின் மார்பு, வயிறு, முதுகு உட்பட 5 இடங்களில் கத்திக்குத்து காயம் தென்பட்டது. கழுத்து பெல்ட் கொண்டு இறுக்கப்பட்டு, முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டு இருந்தது. பெண்ணின் மார்பு பகுதியில் கத்திக்குத்து இருந்த நிலையில், அவரும் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தார்.
பெண் பலாத்காரம் செய்து கொலையா?
பெண்ணின் ஆடைகள் அலங்கோலத்துடன் இருந்ததால், அவர் கொலை செய்யப்படும் முன்பு பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களை வேறொரு இடத்தில் வைத்து கொலை செய்த கும்பல், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில வீசிவிட்டுச் சென்றுள்ளது. கொலையான நபர்கள் தம்பதிகளா? கள்ளக்காதல் ஜோடியா? எதற்காக கொல்லப்பட்டார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.