செப்டம்பர் 25, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரணி, மாம்பாக்கம், வாழைப்பந்தல் கிராமத்தில் வசித்து வரும் 20 க்கும் மேற்பட்டோர், தனியாருக்கு சொந்தமான வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, பின் சுவாமி தரிசனம் செய்து சொந்த ஊரை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்களின் வேன் நள்ளிரவு நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet Accident), மேட்டத்தூர் கிராமம், திருச்சி - சென்னை (Trichy Chennai GST National Highway) ஜி.எஸ்.டி சாலையில் வந்தது. Nagapattinam Accident: அரசுப்பேருந்து மோதி 16 வயது மாணவி மரணம்; டூவீலரில் பள்ளிக்குச் செல்லும்போது சோகம்.!
6 பேர் பரிதாப பலி., 14 பேர் படுகாயம்:
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் வேனில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விதிப்பது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், காயமடைந்த 14 பேரையும் மீட்டு உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை:
மேலும், உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. நிகழ்விடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஆய்வு செய்தார். முதற்கட்ட தகவலில் மேற்கூறிய விசயங்கள் தெரியவந்துள்ளது, மேற்படி விசாரணை தொடருகிறது.