Lok Sabha Election Results 2024: இந்தியா தேர்தல்கள் 2024: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.!
25 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி, தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருக்கிறார்.
ஜூன் 04 , தர்மபுரி (Dharmapuri News): 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 10.30 நிலவரப்படி பாஜக தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளை கடந்து முன்னிலை வகிக்கிறது. அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசம் மாநிலத்தில், வெற்றிக்காக காங்கிரஸ் - பாஜக அணிகள் மோதிக்கொள்வதால், இழுபறி நீடிக்கிறது. Pragg stuns World Champion Ding Liren of China: சீன வீரரை செஸ் போட்டியில் மண்ணைக் கவ்வவைத்த இந்தியனாக பிரக்யானந்தா; நார்வே செஸ் போட்டியில் அசத்தல்.!
தர்மபுரி தொகுதி பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் முன்னிலை: தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தொடக்கத்தில் இருந்த காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன. 38 தொகுதிகளில் திமுகவும், தலா ஒரு தொகுதியில் பாஜக - பாமக, அதிமுக கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன. தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 25,428 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் ஆ. மணி 12,064 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் அசோகன் 10,064 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா 2,453 வாக்குகள் பெற்றுள்ளார்.