Shawarma: சவர்மாவில் ஒரே துர்நாற்றம்; குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து ஷாக்கான தந்தை., அலட்சியத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை?

இந்த சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

Shawarma File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 04, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கெனின். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, நேற்று இரவில் அவர் அங்குள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று, 2 சவர்மா (Shawarma) வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகளுக்கு அதனை சாப்பிட கொடுத்துள்ளார்.

சவர்மாவில் துர்நாற்றம் (Smelling Shawarma):

சவர்மாவை சாப்பிடும் ஆவலில் குழந்தை பாக்கெட்டை பிரித்தபோது துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் பதறிபோனவர் சவர்மாவை வாங்கி பார்த்தபோது, அதிலிருந்து துர்நாற்றம் வெளிப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, உடனடியாக கடைக்கு சென்றவர், அங்கிருந்த பணியாளர்களிடம் தனது புகாரை கூறியுள்ளார். MK Stalin: கேரளாவில் உயிரிழந்த 4 தமிழர்கள்; ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்கி தமிழ்நாடு முதல்வர் உத்தரவு.! 

அலட்சியத்தில் ஹோட்டல் நிர்வாகம்:

புகாரை அலட்சியமாக ஏற்று சவர்மாவை கையில் வாங்கியவர்கள், அதனை குப்பையில் போட்டு அழித்தனர். எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கெனின், உணவுப்பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரியோ வாட்ஸப்பில் போடுங்கள், நாங்கள் வந்து பார்த்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

உணவுப் பாதுகாப்புத்துறை (Tamilnadu Food Safety) நடவடிக்கை இல்லை:

குழந்தைகளுக்கு வாங்கிய பொருள் கெட்டுப்போய் இருக்கிறதே என வெதும்பிப்போன வாடிக்கையாளர், அதிகாரி வருவார் என காத்திருந்துவிட்டு பின் மீண்டும் தொடர்புகொண்டபோது சரிவர பதில் இல்லை. இதனால் மேற்படி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் கெனின் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை:

சரிவர உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தால், கெட்டுப்போன பொருட்களை வைத்து ஹோட்டல் நிர்வாகம் உணவுகளை தயாரிக்காது. கமிஷன், ஊழல், வருமானத்தில் பங்கு என கல்லாகட்ட நினைக்கும் ஹோட்டல் நிறுவனங்களுக்கு ஒத்துழைக்கும் சில அதிகாரிகளால் பாரபட்சமாக எடுக்கப்படும் நடவடிக்கை மரணத்திலும் முடியலாம் என்பதை நினைவு கூர்ந்து செயல்பட்டால் நல்லது. அதே நேரத்தில், உடலுக்கு கேடுகளை ஏற்படுத்தும் சவர்மாவை குசந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதும் சாலச்சிறந்த்து.

கெட்டுப்போன சவர்மாவை விற்பனை செய்த ஹோட்டல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்படுவதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.