Kanchipuram: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்லும் மக்கள்.!

இன்று பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி சிறப்பிக்கப்படுகிறது.

Kanchipuram Vinayagar Chathurthi Celebration (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 07, காஞ்சிபுரம் (Kanchipuram News): உலகெங்கும் வாழும் இந்துக்களால் சிறப்பிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chathurthi), இன்று (07 செப் 2024) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் முழுமுதற் கடவுளான விநாயகர் சிலை வைத்து இன்று வழிபாடுகள் பயபக்தியுடன் தீவிரமாக இருக்கும். தீவினைகள் விலகி நற்பலன் பெறுக விநாயகர் அருளுவதால், அவர் இந்து தெய்வங்களில் முக்கியமானவராகவும் கருதப்படுகிறார். ஏழை பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், பிறப்பு, இறப்பு என அனைத்து இடத்திலும் பொதுவான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். Vinayagar Chathurthi 2024: சங்கடங்களை தீர்க்கும் கற்பகநாத கணபதி; 2024 விநாயகர் சதுர்த்தி நல்ல நேரம், வழிபாடு முறைகள் விவரம் இதோ.! 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தீவிரம்:

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை (Vinayagar Chathurthi 2024) முன்னிட்டு, பலரும் ஆர்வத்துடன் வந்து களிமண் உட்பட மக்கக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி தங்களின் வீட்டிற்கு சென்றனர். இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நாட்கள் கழித்து விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெறும்.

பிள்ளையார் சிலையை ஆர்வத்துடன் வாங்கிச்செல்லும் மக்கள்: