Kanchipuram Gangrape Case (Photo Credit : Youtube / Pixabay)

ஜூன் 11, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 8, 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர் ஒருவர் சேர்ந்து மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து இந்த கொடுமையை அரங்கேற்றியதாகவும் கூறப்படுகிறது.

மாணவியின் வாக்குமூலம் :

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். தற்போது இதன் பேரில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வானிலை: 1 மணிவரை கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல் :

முதற்கட்ட விசாரணையில் 8, 9 ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மற்றும் அங்குள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர் என 4 பேர் சேர்ந்து மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேற்படி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. மேலும் குழந்தைகள் நல அதிகாரிகளும் இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3