ஆகஸ்ட் 19, சென்னை (Festival News): இந்து தெய்வங்களில் முழுமுதற்கடவுள் என போற்றப்படுபவர் விநாயகர். அவர் பூவுலகில் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் அவதரித்த சதுர்த்தி திதி ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி தினமாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இது விநாயகருக்கான முக்கிய வழிபாட்டு நாளாகவும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி 2025 (Ganesh Chathurthi):
விநாயகர் சதுர்த்தியன்று முழுமுதற் கடவுளான விநாயகருக்கு விருப்பமான லட்டு, கொழுக்கட்டை, சுண்டல், அவல், அருகம்புல் போன்றவற்றை வைத்து வழிபடுவது வாழ்வில் துன்பங்களை அகற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 2025 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பலரும் ஆகஸ்டு 26-ஆம் தேதியே விநாயகர் சிலையை வாங்கி வழிபாடு செய்வார்கள். Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
விநாயகர் சிலை வழிபாடு விபரங்கள்:
விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு எத்தனை நாட்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைக்க வேண்டும்? என குழப்பமான எண்ணங்கள் இருக்கின்றன. இதுபோன்ற குழப்பம் நீங்க இந்த விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவை தொடர்ந்து படியுங்கள். விநாயகர் சிலையை குறைந்தது ஒன்றரை நாள் முதல் அதிகபட்சமாக 11 நாட்கள் வரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். விநாயகர் சிலையை நாம் வீட்டில் வைக்கும் நாட்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் பலன்களும் மாறும். அதன்படி குறைந்தபட்சம் ஒன்றரை நாட்கள் வீட்டில் விநாயகரை வைத்து வழிபடுவோர் சதுர்த்தி நாளில் விநாயகரை வீட்டிற்கு அழைத்து வந்து பின் பஞ்சமி அன்று சிலையை கரைக்க எடுத்துக் கொடுப்பார்கள்.
நாட்களும்-பலன்களும்:
இந்த காலகட்டத்தில் விநாயகருக்கு இதயபூர்வமான வழிபாடு இருக்கும் என்றாலும், பிரியா விடை அளிப்பதில் சிரமம் இருக்கும். அதே நேரத்தில் மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்து நைவேத்தியங்கள் படைப்பது, பிரார்த்தனை செய்வது, 10 நாட்கள் வைத்து வழிபடுவது போன்றவை மங்களத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதிகபட்சமாக ஐந்து நாட்கள் வைத்து வழிபாடு செய்வது நேர்மறை ஆற்றலையும், செல்வ செழிப்பையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஏழு நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் ஆனந்தம் குவியும் என்றும் சொல்லப்படுகிறது. Vinayagar Jayanthi 2025: விநாயகர் ஜெயந்தி 2025 எப்போது? நல்ல நேரம், விரத வழிபாடு முறைகள் என்னென்ன? விளக்கம் இதோ.!
விநாயகரின் அருள்:
விநாயகர் சிலை வழிபாடு பொறுத்தவரையில் அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வழிபட்டுக் கொள்ளலாம். அதில் எந்த தடையும் இல்லை. விநாயகரின் மீதான அன்பு, பக்தி உணர்வு, நமது நல்லெண்ணம் போன்றவை விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்க உதவி செய்யும்.